கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
pregnant women know what avoid cesarean section during childbirth
கர்ப்பம் தரித்ததில் இருந்து உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால், கருவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கும், அப்போது வேறு வழி இன்றி தாயை காப்பாற்ற சிசேரியன் செய்யும் நிலை ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை 3.5 கிலோவிற்கு மேல் போகும்போது தாயின் இடுப்பு எலும்புகள் பிரசவத்திற்கு வளைந்து கொடுக்காது. மேலும் உணவு கட்டுப்பாடு மிக அவசியம்.
குளிர்பானங்கள்,பழங்கள், இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அது மட்டுமின்றி அதிக அளவு உப்பு கலந்து உள்ள உணவு உட்கொள்வதும் இருக்கக் கூடாது.
மேலும் சிறுநீரில் அல்புமின் டிரேஸ் இருந்தாலும் அல்லது ஒன் பிளஸ் என இருந்தாலும் தாய்க்கு கிட்னி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அப்போது வேறு வழி இன்றி சிசேரியன் செய்ய வேண்டியது வரும்.
எனவே குழந்தையின் எடை அதிகரிப்பு, தாய் சேய்யை காப்பாற்றவே சிசேரியன் செய்யப்படுகிறது. எனவே கர்ப்பம் தரித்ததில் இருந்து சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சிசேரியன் தேவை இருக்காது.
English Summary
pregnant women know what avoid cesarean section during childbirth