சரிந்து வரும் சின்ன வெங்காயம் விலை - கவலையில் மூழ்கிய வியாபாரிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக திண்டுக்கல் மொத்த வெங்காயம் மார்க்கெட்டில் வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன் தரத்தை பொறுத்து ரூ.15 முதல் ரூ.35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இதுவரை இல்லாத அளவிற்கு 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 9,000 மூட்டைகள் விற்பனைக்கு திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. அதிலும் இன்று மட்டும் 5,000 மூட்டைகள் ஏற்றுமதிக்காக வந்துள்ளது.

இந்த மார்க்கெட்டிலிருந்து இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை சரசரவென குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளும்,விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் பேசியதாவது, "கடந்த வாரம் வரை ஆயிரம் அல்லது 2,000 மூட்டைகள் தான் வந்தன. ஆனால் தற்போது 5,000 மூட்டைகளுக்கு மேல் வருகிறது. இங்கிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர்,துபாய் உள்ளிட்ட நாடுகளில் தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் வெங்காய விலை அடி மட்டத்திற்கு போய்விடும். விவசாயிகளுக்காவது பாதி நஷ்டம் தான் ஏற்படும். எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு முழுமையாக நஷ்டம் ஏற்பட்டு விடும். இந்த ஆண்டு சின்னவெங்காயத்தின் மகசூலும், வரத்தும் அதிகரித்துள்ளது. 

வெங்காயத்தின் வரத்தை நிறுத்திவிட்டால் விவசாயிகள் தான் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும், குறைய அதிக வாய்ப்புள்ளது" என்று கவலையுடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

small onion price decrease


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->