நெருங்கும் பொங்கல் பண்டிகை; பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்..!
special train run in banglore to thoothukudi for pongal festival
வருகின்ற 14 ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக வெளியூர்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.
அதன் படி சேலம் வழியாக பெங்களூரு- தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரெயில் நாளை மறுநாள் பெங்களூரூவில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும்.
மறுமார்க்கமாக இந்த ரெயில் 3.33 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் வருகிற 11-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக இரவு 7.35 மணிக்கு சேலம் வந்தடையும். மறுமார்க்கமாக 7.45 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special train run in banglore to thoothukudi for pongal festival