பங்குச்சந்தை - சென்செக்ஸ் 23.32 புள்ளிகள் அதிகரிப்பு!
Stock market Sensex 23.32 points increase
மும்பை : இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 101 புள்ளிகள் குறைந்து 66,582 ஆக இருந்தது. அதே போல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் குறைந்து 19,716 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியுள்ளது. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 23.32 புள்ளிகள் அதிகரித்து 66,707.58 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.80 புள்ளிகள் உயர்ந்து 19,758.80 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு மத்தியில், இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியுள்ளது என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது.
மேலும் தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாஉள்ளிட்ட பல பங்கு சந்தைகள் உயர்வில் இருந்தன.
அதனை அடுத்து கோடாக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.
English Summary
Stock market Sensex 23.32 points increase