2024 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கனவு அணியில் இடம்பெறாத கோலி மற்றும் ரோகித் சர்மா..? - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கனவு அணியாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே செய்துள்ளார்.

ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள அணியில் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். 27 இன்னிங்ஸ் விளையாடியுள்ள 1332 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 52க்கு மேல் இருக்கிறது. இதில் ஏழு அரை சதம், மூன்று சதம் அடங்கும். ஜெய்ஸ்வாலின் ஜோடியாக  இங்கிலாந்து சேர்ந்த பென் டக்கட்-ஐ  ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். 

2024 ஆம் ஆண்டு  1100 ரங்களுக்கு மேல் அடித்துள்ள பென் டக்கட், ஐந்து அரை சதம் அடித்துள்ளார். மூன்றாவது வீரராக நியூசிலாந்து அணியில் ஜாம்பவான் கேன் வில்லியம்சன் 18 இன்னிங்ஸ் விளையாடி 101 ரன்களை அடித்திருக்கிறார். 

இதில் அவருடைய சராசரி கிட்டத்தட்ட 60 ஆகும். இந்த ஆண்டில் மட்டும் அவர் நான்கு சதம் அடித்திருக்கிறார்.இவரை மூன்றாவதாக தெரிவு செய்துள்ளார்.

அடுத்து  டெஸ்ட் கனவு அணியில் நான்காவது வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ-ரூட்டை தேர்வு செய்திருக்கிறார் ஹர்சா போக்லே.

இவர் 31 இன்னிங்ஸ் விளையாடி  1556 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 55க்கு மேல் இருக்கிறது. இதில் 5 அரை சதமும்,ஆறு சதமும் அடங்கும். 

இதனை அடுத்து ஹர்ஷா போக்லே,  ஐந்தாவது வீரராக இங்கிலாந்து அணியின் ஹாரி புருக்கை தேர்வு செய்திருக்கிறார். 

நடப்பு ஆண்டில் நான்கு சதம் அடங்கலாக மொத்தமாக 1100 ரன்கள் அடித்துள்ளதோடு, சராசரி 55 என ஹாரி புரூக் விளையாடி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து  ஆறாவது வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸ் -ஐ ஹர்சா போக்லே தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..


 இவர் நடப்பாண்டில் 1049 ரன்கள் அடித்து 75 என சராசரி வைத்திருக்கிறார். அத்துடன், மெண்டீஸ் ஐந்து சதம் அடித்திருக்கிறார்.

ஏழாவது வீரராக பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வானை ஹர்ஷா போக்லே தேர்வு செய்திருக்கிறார். நம்பர் எட்டாவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார்.

ஜடேஜா 2024 ஆம் ஆண்டு  மட்டும் 44 விக்கெட்டுகள், 500 ரன்கள் அடித்துள்ளார். இதேபோன்று மூன்று வேக பந்துவீச்சாளர்களாக இங்கிலாந்து வீரர் கெஸ் ஆட்கின்சன், தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா மற்றும் இந்திய வீரர் பும்ராவை தேர்வு செய்துள்ளார். 

குறித்த தேர்வு அணியில் மூன்று இங்கிலாந்து வீரர், 3 இந்திய வீரர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு வீரர் இடம்பெற்றுள்ளனர். எனினும் ஹர்ஷா போக்லே கனவு அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, பண்ட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2024 best playing xi of the test team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->