வாஜ்பாய் பிறந்த நாள் விழா..புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பாரதப் பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று‌ கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டட‌ வளாக அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் தமிழகம் மட்டுமில்லாமல் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதேபோல நாடுமுழுவதும் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும் ,நலத்திட்டங்களை வழங்கியும் வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடினர்.

 அந்தவகையில் முன்னாள் பாரதப் பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று‌ கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டட‌ வளாக அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து  சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், பாஸ்கர் , அசோக் பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vajpayees Birthday Celebrations Honours from the Government of Puducherry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->