வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 சுற்றுலாப் பயணிகள்!!! சொகுசு கப்பலில் பரவிய வைரஸ் எது?
250 tourists infected with virus spread luxury queen mary 2 ship
குனார்ட் என்பது, இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுலா நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் சார்பில் இயக்கப்படும் சொகுசு கப்பல்களில் குயின் மேரி 2 என்ற ராட்சத சொகுசு கப்பலில் அதிநவீன சொகுசு அறைகள், திரையரங்கம், நூலகம், பிரமாண்ட நீச்சல் குளம்,கேசினோ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது .

உலகிலுள்ள சொகுசு கப்பல்களில் மிகவும் ஆடம்பரமான சொகுசு கப்பல் என குயின் மேரி 2 வர்ணிக்கப்படுகிறது.இந்த சொகுசு கப்பல், கரீபியன் தீவு நாடுகளிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் வழியாக இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் நகருக்கு இயக்கப்பட்டது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், கப்பல் கேப்டன் உள்பட 1,200-க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பயணித்தனர்.
திடீரென கப்பலில் இருந்த பலருக்கு 'நோரோ' என்னும் வைரஸ் நோய் பாதிக்கப்பட்டது.இதன்பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலிலுள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு எனத் தெரிவித்துள்ளனர். தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் சிகிச்சை குறித்து ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
English Summary
250 tourists infected with virus spread luxury queen mary 2 ship