மீண்டும் உயர்ந்த முட்டை விலை! ஒரு முட்டை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கோழி பண்ணைகளில் ஆறு கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. 

தினசரி சுமார் ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு அரசின் சத்துணவு, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலமாக முட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. 

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி பண்ணைகளின் முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி 5.80 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு 5.60 ஆக இருந்தது. 29 ஆம் தேதி முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 5.25 ஆனது.

இந்நிலையில் நாமக்கல் மண்டல தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை பைசாவில் சென்னையில் 600 பைசா, பெங்களூரு 570, டெல்லி 450, ஹைதராபாத் 495, மும்பை 570, மைசூர் 570, கொல்கத்தா 525 பைசாவில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu egg price details


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->