இன்றைய பங்குச் சந்தை நிலவரம் எப்படி இருக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


18வதுமக்களவைத் தேர்தல் முடிந்ததையொட்டி ஜூன் 1ம் தேதி மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் எதிரொலித்தது. இதையடுத்து அதானி மற்றும் அம்பானி குழும பங்குகள் கருத்துக்கணிப்புகள் வெளியான மறுநாள் ஏறுமுகத்தில் இருந்தன.

தொடர்ந்து ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், அன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவு 4000 புள்ளிகள் வரை பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பெருநஷ்டம் அடைந்தனர்.

இந்நிலையில் கீழிறங்கிய பங்குச் சந்தை புள்ளிகள் நேற்று 2000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதையடுத்து இன்றும் மும்பை சென்செக்ஸ் 740 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 220 புள்ளிகளாக உள்ளது. 

மேலும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 233 புள்ளிகள் உயர்ந்து 22 ஆயிரத்து 850 புள்ளிகளில் இன்று வர்த்தகம் நடந்து வருகிறது. முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடந்த அன்று 4000 புள்ளிகள் சரிந்த நிலையில் இருந்த சென்செக்ஸ் இன்று கிட்டத்தட்ட விட்டதை பிடித்து விட்டது போன்ற நிலைக்கு வந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Todays Share Market Details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->