மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ''துவரம்பருப்பு விலை''... கிலோ எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனைக்கு தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில் வெளி சந்தைகளில் துவரம் பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுவாக தமிழகத்தில் மளிகை பொருட்களின் விலை செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து ஏப்ரல், மே மாதம் வரை சீராக இருக்கும். 

ஆனால் நடப்பு ஆண்டில் மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு விலை கிடுகிடுவென அதிகரித்து இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் ரூ. 160 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் துவரம் பருப்பு ஒரு கிலோ தற்போது ரூ. 195 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கோவையின் தானிய மார்க்கெட் , சந்தைகளில் பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை மற்றும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து காணப்படுவது பொதுமக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Toor dal price increase


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->