உங்க கிட்ட 'பான் கார்டு' இல்லையா..?! அப்போ உடனே 'அப்ளை' பண்ணுங்க.. எதற்கெல்லாம் 'பான் கார்டு' தேவை என்று தெரியுமா?!
Uses Of Pan Card
இந்தியாவில் நிதி சார்ந்த பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு 'பான் கார்டு' மிகவும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். 10 இலக்க எண்களைக் கொண்டுள்ள பான் கார்டு, இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது.
இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்படும் இந்த பான் கார்டு மூலம் தான் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். இந்த பான் கார்டு இல்லை என்றால், வருமான வரிக் கணக்கை யாராலும் தாக்கல் செய்ய முடியாது.
எதற்கெல்லாம் 'பான் கார்டு' தேவை?
* வங்கிக் கணக்கைத் தொடங்க.
* பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான டீமேட் கணக்குத் தொடங்க.
* 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய.
* கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றை அப்ளை செய்ய.
என எல்லாவற்றிற்கும் 'பான் கார்டு' அவசியம்.
ஒருவர் எத்தனை 'பான் கார்டு' வைத்திருக்கலாம்?
ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது. இது வருமான வரித் துறையால் வழங்கப் படுவதால் 'பான் கார்டு' தொலைந்தாலும் முறையான ஆதாரங்களை சமர்ப்பித்து மீண்டும் வேறு பான் கார்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பான் கார்டுகளை பயன்படுத்த முடியாது.
தற்போது 7 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டுள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே உங்களிடம் 'பான் கார்டு' இல்லையென்றால் உடனே அப்ளை செய்து விடுங்கள். அப்போது தான் வருமான வரி செலுத்த முடியும்.