மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணி - தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, மயிலாப்பூர், திருவள்ளுவர் திருக்கோவிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் மூலம்,

திருவள்ளுவர் திருக்கோவிலில் 2.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கல்லினாலான பொற்றாமரை குளம் அமைத்தல் மற்றும் கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிகள், 
8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளுவருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம், பிரகார மண்டபம் மற்றும் திருவள்ளுவர் பிறந்த இடத்திற்கு புதிய கருங்கல்லினாலான மண்டபம் கட்டும் பணிகள், 
2.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாசுகி அம்மையாருக்கு கருங்கல்லினாலான புதிய கர்ப்பக்கிரகம் அமைத்தல், புதிதாக கருங்கல்லினாலான முப்பால் மண்டபம் கட்டும் பணிகள்;
2.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதி மற்றும் மகாமண்டபம் கட்டுதல், காமாட்சியம்மன் சன்னதி, கருமாரியம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, நடராஜர் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டும் பணிகள் நடக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Mayilapur Thiruvalluvar temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->