அரங்கேற்ற நிகழ்ச்சியை பிரம்மிக்க வைத்து அசத்திய 6 மாணவிகள்.!
6 Girls Perform Awe-inspiring Performance
சென்னை, மாதவரம் ஆருத்ரா நாட்டியால பள்ளியில் பரதநாட்டியம் பயிற்சியை முடித்த ஆறு மாணவிகளுக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் சலங்கை பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தினர்.
சென்னை, மாதவரம் அடுத்த, மூலசத்திரம் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆருத்ரா நாட்டியால பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டியம் கற்று பயிற்சியை முடித்து சலங்கை பூஜை செய்து பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்துள்ளனர்.இந்த ஆருத்ரா நாட்டியால பள்ளியின் பயிற்சியாளர் குரு ராஜேஸ்வரி செல்வராஜ் ஆவர்.
இந்தநிலையில் பயிற்சியாளர் குரு ராஜேஸ்வரி செல்வராஜ் அவர்களின் பயிற்சியில் தற்போது 6 மாணவிகள் பரதநாட்டியம் கற்று பயிற்சியை முடித்து சலங்கை பூஜை செய்து பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்துள்ளனர். மாணவி காவியா ஸ்ரீ ,ரூபிகா, முத்துலட்சுமி ,மிருதுளா, லக்ஷிதா, மோகிதா ஆகிய ஆறு மாணவர்களும் ஆருத்ரா நாட்டிய பயிற்சி பள்ளியில் பரதநாட்டியம் கற்று பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
பாரதி வித்யா பவனில் நடைபெற்ற இந்த பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் சலங்கை பூஜையில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தி கௌரவித்தனர்.பரதநாட்டிய பயிற்சியாளர் குரு ராஜேஸ்வரி செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆச்சாரியார் பாக்கிய ஸ்ரீ சதீஷ் ,வடிவுடையம்மன் கோவில் கேசவன் நம்பூதிரி. மயிலாப்பூர் பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், மாணவியின் பெற்றோர், ஆன்மீக அன்பர்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு பரதநாட்டியம் அரங்கேற்றத்தில் பங்கு பெற்ற ஆறு மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
தாளம் ,மற்றும் பாடலுக்கு ஏற்றவாறு ஆறு மாணவிகளும் சலங்கை பூஜையில் சிறப்பாக நடனமாடி அசத்தினர். அது மட்டுமல்லாமல் நடனமாடிய மாணவிகளின் பெற்றோர் பயிற்சியாளர் ராஜேஸ்வரி செல்வராஜ் அவர்களை வாழ்த்தினர். மேலும் நிகழ்ச்சியில் பரதநாட்டியம் அரங்கேற்றிய மாணவிகளுக்கு சிறப்பு நினைவு பரிசுகளும், சலங்கையும் வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது,
English Summary
6 Girls Perform Awe-inspiring Performance