அதிகரிக்கும் காய்ச்சல் - கடலூர் மாவட்ட மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு.!
peoples croud increase in cuddalore district hospitals
பருவநிலை மாற்றம் மற்றும் பொங்கல் பண்டிகையில் போகி அன்று அதிகளவில் பொருட்கள் எரிய வைத்ததால் சுற்றுசூழல் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன
இதன் காரணமாக இன்று காலை முதல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து காணப்படுகின்றதோ அதனை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
English Summary
peoples croud increase in cuddalore district hospitals