மனைவியை கொன்று குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர்..ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!  - Seithipunal
Seithipunal


முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அவரது மனைவியை கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிரஷர் குக்கரில் வேக வைத்தது  ஏரியில் வீசிய  சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான குருமூர்த்தி, இவர் அங்கு செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவரது மனைவி மாதவியை கடந்த 18ம் தேதியில் இருந்து காணவில்லை தெரிகிறது . இதையடுத்து இது குறித்து மாதவியின் பெற்றோர் குருமூர்த்தியிடம் கேட்டதற்கு சரியாக பதில் சொல்லாத காரணத்தால் மாதவியை காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீசில் ஐதராபாத்தைச் சேர்ந்தசெய்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுதொடர்பாக கணவன் குருமூர்த்தியிடம் விசாரித்தபோது தனது மனைவியை கொலை செய்ததை குருமூர்த்தி ஒப்புக்கொண்டார். கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டதாகவும், தடயங்களை அழிக்க மனைவியின் உடலை வீட்டு பாத்ரூமில் வைத்து துண்டுகளாக வெட்டி, அதனை சமையல் செய்ய பயன்படும் குக்கரில் வைத்து வேக வைத்ததாக விசாரணையில் தெரிவித்தார்.

இதையடுத்து அதோடு மட்டுமில்லாமல் மனைவி எலும்பை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்து அனைத்தையும் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று ஏரியில் போட்டுவிட்டதாகவும் வாக்குமூலமாக அவர் கூறினார். மனைவி உடலை வெட்டி முழுவதுமாக வேகவைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குருமூர்த்தியை கைது செய்த போலீசார், தங்களது காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குருமூர்த்தி சொன்ன ஏரியில் போலீசார் மோப்ப நாய்களின் துணையோடு உடல் பாகங்களை தேடினர்.ஆனால் அங்கு  உடல் பாகங்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அவரது மனைவியை கொன்று,, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரஷர் குக்கரில் வேகவைத்து ஏரியில் வீசி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex-serviceman kills wife, boils her in cooker Shocking incident in Hyderabad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->