எங்க அம்மாவும் ஓகே சொல்லிட்டாங்க.. கல்யாணம் பன்னிக்கலாமா? பூனம் பாஜ்வா போஸ்ட் வைரல்.!  - Seithipunal
Seithipunal


பிரபல சினிமா நடிகையான பூனம் பாஜ்வா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு சிறுவன் தனக்கு லவ் லெட்டர் அனுப்பியதை பகிர்ந்துள்ளார்.

சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் பூனம் பாஜ்வா, அதன் பின்னர் அரண்மனை 2, தெனாவட்டு, ரோமியோ ஜூலியட், ஆம்பள உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். 

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படத்திலும் நடித்து வருவார். இறுதியாக பூனம் பாஜ்வா நடிப்பில் குப்பத்து ராஜா படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாஜ்வா ஒரு பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில் ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பூனம் பாஜ்வாவை பார்த்து, "உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களை நான் திருமணம் செய்ய ஆசை கொள்கிறேன். எனக்கு 21 வயது வரும் வரை காத்திருக்க முடியுமா? எனக்கு வயது வித்தியாசம் எல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. என் அம்மாவிடமும் சம்மதம் வாங்கி விட்டேன். திருமணத்திற்கு பின்னும் நீங்கள் கிளாமராக நடிக்கலாம்." என்று தெரிவித்து இருக்கின்றான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7th student Love Letter To Poonam bajwa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->