மூன்று நாள் பயணமாக தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin Kanniyakumari Thoothukudi
முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டிசம்பர் 29 அன்று சென்னை இருந்து புறப்படும் முதல்வர், முதலில் தூத்துக்குடிக்கு சென்று, ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
அடுத்த நாள், டிசம்பர் 30 காலை, தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைத்து, அதன்பின் கன்னியாகுமரிக்கு பயணம் செய்கிறார்.
கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெறும் இரு நாள் வெள்ளி விழாவில் முதல்வர் கலந்துகொள்கிறார்.
மேலும், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.
English Summary
CM Stalin Kanniyakumari Thoothukudi