நான் சொன்னதுக்கு அப்புறம் தான் மாட்டு இறைச்சி விற்பனை - விடாமல் அடிக்கும் நீலம்!
Neelam Pannamattu maiyam Beef food
நீலம் பண்பாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த இரண்டு நாட்களாகச் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய ‘உணவுத் திருவிழா’வில் மாட்டு இறைச்சி உணவை மட்டும் புறக்கணிக்கத்திருப்பதாகப் பதிவு செய்திருந்தோம்.
அதையொட்டி உணவுத் திருவிழாவிற்கு நேற்று மாலை நேரடியாகவே சென்றோம். ஸ்டால் எண் 17 இல் (கரூர்) இன்றிலிருந்துதான் பீப் சுக்கா மட்டும் கிடைக்கப் பெறுகிறது, வேறுவகையிலானது ஏதுமில்லை.
அதுவும் இன்றிலிருந்து தான் பீப் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பதாக ஸ்டால் உரிமையாளர் சொல்வதையும் அறியமுடிகிறது. இச்சூழலில் உணவுப் பட்டியிலில் பீப் உணவு இடம்பெறாமால் போனது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
வருங்காலங்களில் அரசு தலைமையேற்று நடக்கக்கூடிய உணவுத் திருவிழக்காளில் இம்மாதிரியான உணவுப் பாகுபாடு இருக்கக்கூடாது என்பதே எங்களுடைய எண்ணம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Neelam Pannamattu maiyam Beef food