கம்போடியாவில் 109 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ள எலி..! - Seithipunal
Seithipunal


கம்போடியா நாட்டில் எலி ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளது.

ரொனின் என்று அழைக்கப்படும் இந்த இராட்சத ஆபிரிக்க எலியானது, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கம்போடியாவின் வடக்கு பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த எலி, 109 கண்ணிவெடிகள் மற்றும் 15 போர் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் ரொனின் எலியும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர், 'ஹீரோ' என அழைக்கப்படும் எலி 71 கண்ணிவெடிகள் மற்றும் 38 வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்தமையே உலக சாதனையாக இருந்த நிலையில், 109 வெடிக்காத கண்ணிவெடிகளை இந்த ரொனின் எலி கண்டுபிடித்துள்ளது.

இராட்சத ஆபிரிக்க எலிகள் பொதுவாக பாரம் குறைந்த உயிரினம் என்பதால் அவை கன்னி வெடிகளை வெடிக்க வைக்க தூண்டாது. அத்துடன், அவற்றுக்கு இயற்கையாகவே அந்த எலிகளுக்கு உள்ள மோப்ப சக்தி மற்றும் பயிற்சி ஆகியவை கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rat sets world record by finding 109 landmines in Cambodia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->