90-களில் தமிழ் சினிமாவின் பெண் இயக்குநராக வலம்வந்த பிரபல நடிகை மரணம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் பிரபல இயக்குனர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டிருந்தவர் ஜெயதேவி. 

இவர் தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு வெளியான 'இதய மலர்' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம், சரியான ஜோடி ஆகிய படங்களில் ஜெயதேவி நடித்துள்ளார். 

1980 ஆம் ஆண்டு 'மற்றவை நேரில்' என்ற படத்தை இயக்கினார். வா இந்த பக்கம் என்ற படத்தின் மூலம் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். 

தொடர்ந்து விலாங்கு மீன், விலங்கு பாசம் ஒரு வேஷம், நலம் நலமறிய  ஆவல் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஜெயதேவி பல படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

ஜெயதேவி பிரபல இயக்குனர் வேலு பிரபாகரனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். 

சில மாதங்களாக நடிகை ஜெயதேவி இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு போரூரில் இன்று மாலை நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90s Tamil cinema famous actress director died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->