ஏ.ஆர்.ரகுமானின் லைவ் மியூசிக் நிகழ்ச்சி.. 10,000 அடி உயரத்திலிருந்து குதித்து வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நிறைய நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் தற்போது மலேஷியா நாட்டின் கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றார். 

டிஎம்ஒய் கிரியேசன் என்றும் நிறுவனம் இதனை வழங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் 2023 ஜனவரி மாதம் 28ம் தேதி நடக்க இருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியான விதம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

அதற்கு காரணம், மிகவும் புதுமையான முறையில் சராசரியாக 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாரசூட்டில் இருந்து குதித்து அதன் பின், வெளியிட்டனர். 

இதுபோன்ற ஒரு முறையில் அறிவிப்பை வெளியிடுவது மலேஷியாவில் இது தான் முதல் முறை. ஆதலால்,  இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' -ல் அதிக உயரத்திலிருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a r rahman live program in malasia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->