நாற்பதாவது வயதில் திருமண அப்டேட் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா பட நடிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான எஸ்.ஜே. சூர்யா நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிலா. "மீரா சோப்ர" என்ற இயற்பெயர் கொண்ட இவர் 'மருதமலை', 'லீ' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஆனால், இவர் சமீப காலமாக தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு பிரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா என்று இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மீராவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில், மீரா சோப்ரா ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கும் மீரா சோப்ரா, "நீங்கள் கேள்விப்பட்ட செய்திகள் சரிதான். எனக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது. 

மார்ச் மாதம் நடக்க இருக்கும் எனது திருமணத்திற்கு தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். ராஜஸ்தானில் நடக்கும் என்னுடைய திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர். மாப்பிள்ளை குறித்தான விஷயத்தை சீக்கிரம் சொல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actoe meera sopra marriage update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->