ஆகஸ்ட் 18 முதல் விடாமுயற்சி படபிடிப்பு.?! மீண்டும் இணையும் "மங்காத்தா" கேங்க்.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாயை வாரி குவித்தது. 

இதை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தனது 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

கடந்த மே 1ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி "விடாமுயற்சி" என்ற தலைப்புடன் போஸ்டர் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் வெளியான அறிவிப்போடு விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. தற்போது அஜித்குமார் பைக் ரைடு சென்றுள்ளதால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக தகவல் கசிந்த நிலையில் தமன்னா நடிக்க உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்தான முக்கிய தகவல் தற்பொழுது கசிந்துள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும்  ஆகஸ்ட் 18 தேதி தொடங்குகிறது எனவும், அபுதாபி, சென்னை, புனே, ஹைதராபாத் ஆக இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த படத்தில் த்ரிஷா நாயகியாகவும், தமன்னா இரண்டாவது கதாநாயகியாகவும் நினைக்க உள்ளதாகவும், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் இரண்டாம் கட்ட வில்லங்ககளாக நடிக்க உள்ளனர். சூப்பர் ஹிட் படமான மங்காத்தாவில் நடிகர் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மற்றும் பிற மொழி ஹீரோக்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் நடிகர்கள், குழுவினர் மற்றும் படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor AjithKumar vidamuyarchi first schedule starts on August18


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->