வனிதா பற்றிய கேள்விக்கு.. அருண் விஜய் கொடுத்த ஷாக்.?! செய்தியாளர் சந்திப்பில் நிகழ்ந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகிய யானை திரை படத்தில் ஹீரோவாக அருண்விஜய் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அருண் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான் இது. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. 

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் மட்டுமின்றி விஜயகுமார் குடும்பமே கொண்டாடியது. குடும்பத்தினர் அனைவரும் ஒரே மாதிரி உடை அணிந்து சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர். 

இத்தகைய நிலையில் சமீபத்தில் இது குறித்து ஒரு பேட்டியில் அருண் விஜய் பேசியிருந்தார். அப்பொழுது நிருபர், 'படத்தில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் கருத்து கூறினீர்கள். ஆனால், உங்களது நிஜ வாழ்வில் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். 

அதற்கு அருண்விஜய் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், அவருடன் இருந்த நபர், 'படத்தை பற்றி மட்டும் பேசுங்கள் அவரது குடும்ப விஷயம் தேவையில்லாதது' என்று கூறினார். அருண் விஜய்யும் அதை ஆமோதிக்கும் விதமாக நன்றி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். படத்தில் கூறும் கருத்துக்களை தனது நிஜ வாழ்வில் நடிகர்கள் என்றுமே செய்வது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor arun Vijay angry with reporter In yanai pressmeet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->