நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிட்டு போங்க, மனம் குமுறிய நடிகை பாவனா..! - Seithipunal
Seithipunal


மலையாள நடிகை பாவனா, தன்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சி செய்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த பாவனாவிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த உடை குறித்து பல்வேறு விமர்சனங்கள், கிண்டல்கள் எழுந்துள்ளது. இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு வாழ முயற்சிக்கிறேன். ஆனால், என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து என் சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். 

நான் என்ன செய்தாலும் என்னைக் காயப்படுத்த நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் என்னை இருளுக்குள் அனுப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியை இவ்வாறுதான் காண்கிறார்கள் என்று நான் புரிந்துக்கொள்கிறேன். அப்படித்தான் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால், அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்' என பதிலளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor bavana instagram post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->