குற்றச்செயல்களில் அதிகம் ஈடுப்படும் போலீசார்; சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு, டிசம்பர், 16-ஆம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம்,சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங் வழிப்பறி செய்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டார். 

அத்துடன், அவருக்கு உடந்தையாக இருந்த, சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். இந்த மனு குறித்தான விசாரணை இன்று ஜனவரி 22 வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. வேலியே பயிரை மேய்வதா?' என கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு போலீசார் தரப்பில், 'வழக்கில் இன்னும் விசாரணை நிறைவடையவில்லை. மேலும் ஒரு சிறப்பு எஸ்.ஐ., கைது செய்யப்பட்டிருப்பதால் விசாரணை நடத்த வேண்டி உள்ளது' என விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் ஜாமின் மனு மீதான விசாரணை ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police officers who are involved in a lot of crimes Madras High Court strongly condemns


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->