வரலாற்றில் முதல் முறையாக... வெங்கட் பிரபுவுடன் இணையும் நடிகர் ஜீவா..! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'என்.சி 22'. இப்படத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரித்து வருகிறது. 

இதையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   

இந்நிலையில் 'என்.சி 22' படத்தில் நடிகர் ஜீவா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால், இயக்குனர் வெங்கட் பிரபுடன் ஜீவா முதல் முறையாக இணைகிறார்.  

ஜீவா, கடைசியாக '83' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததையடுத்து, சுந்தர்.சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்', 'கோல்மால்', 'வரலாறு முக்கியம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jeeva joined in director vengat prabu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->