அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும்..அட்டவணைப்படி தேர்வு நடக்கும்..நிர்வாகம் தகவல்! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக  கைது செய்யப்பட்டு  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில், அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்கலைக்கழகம் நாளை வழக்கம்போல் இயங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனால், நாளை அட்டவணைப்படி தேர்வு நடக்கும். விடுமுறை அல்ல என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University will function as usual tomorrow The exam will be conducted according to the schedule Admin Information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->