நடிகர் கமல் மீது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு சங்கத்தில் புகார்!!
actor Kamal in Complaint against Tirupati Brothers production association
நடிகர் கமலஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடித்த திரைப்படம் உத்தம வில்லன். இத்திரைப்படம் வெகுஜன மக்கள் இடையே சென்று அடையாததாலும் கதையின் ஓட்டம் விறுவிறுப்பாக இல்லாத காரணத்தினாலும் நடிகர் கமலுக்கு தோல்வி படமாக அமைந்தது.
உத்தம வில்லன் திரைப்படம் தோல்வி அடைந்ததால் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நடிகர் கமலஹாசன் 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை நடித்து தருவதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடமும் தயாரிப்பு சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
உத்திரவாதம் அளித்த நடிகர் கமலஹாசன் 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தங்களுக்கு விருப்பமான கதையில் தயாரித்து நடித்துக் கொடுக்கவில்லை என நடிகர் கமலஹாசன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
actor Kamal in Complaint against Tirupati Brothers production association