பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலகினால் சிறைக்கு செல்வார்.. நாராயணசாமி சொல்கிறார்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதியோர் தொகை சரியான நேரத்தில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது, ஆனால் தற்போதைய ஆட்சியில் 4 மாதங்களுக்கு பின்னர் வழங்கப்படுகிறது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புகார் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தற்போதைய என் ஆர் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்,கடந்த காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு இறுதி கட்டத்தில் இருந்த திட்டங்களை முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுத்தி வருகிறார்,புதிய திட்டம் ஒன்றை கூட செயல்படுத்தவில்லை.

மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் இணக்கமாக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடியை ஏன் செய்ய முடியவில்லை.அறிவிப்பு முதலமைச்சராக மட்டுமே ரங்கசாமி உள்ளார்.ஒரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் ரங்கசாமி கொண்டு வராத நிலையில், மக்கள் வேதனையில் உள்ளனர்.

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்தவில்லை.கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதியோர் தொகை சரியான நேரத்தில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது, ஆனால் தற்போதைய ஆட்சியில் 4 மாதங்களுக்கு பின்னர் வழங்கப்படுகிறது.

பாஜகவில் சபாநாயகர், அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்தனி அணியாக உள்ளனர்.என்.ஆர்- பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியை சுரண்டி கொண்டிருக்கிறது.புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும்.தேர்தல் வர ஒரு வருட காலம் உள்ள நிலையில்  ஒற்றுமையாக இருந்து காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும் - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If Rangasamy quits BJP, he will go to jail. Narayanasamy says!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->