தமிழகத்தை பதறவைத்த கர்ப்பிணி பெண்ணின் நான்கு மாதக் கரு பரிதாபகரமாக உயிரிழந்தது!
Vellore Train Harassment some shocking info
வேலூர் அருகே ரயிலில் பாலியல் தொல்லைக்குள்ளான கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாதக் கரு பரிதாபகரமாக உயிரிழந்தது.
ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி, திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். கடந்த 6 ஆம் தேதி தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்காக கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த இளைஞர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
கர்ப்பிணி பெண் என்று பாராமல் துன்புறுத்திய குற்றவாளி ஹேமராஜ், அவரை KV குப்பம் அருகே ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில், கை, கால்கள் முறிந்து தலையில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த கொடூர சம்பவத்தில் கரு உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மருத்துவர்கள் கருவின் இதயத் துடிப்பு நின்று போனதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஹேமராஜ் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
English Summary
Vellore Train Harassment some shocking info