ஈகோவை விட்டுவிடுங்கள்.. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
Let go of the ego. Thirumavalavan appeals to Indian alliance leaders
இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது என்றும் ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.ஆகவே இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என கூறினார்.
மேலும் திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர் ஆனால் பா.ஜ.க. போன்ற சங்பரிவார கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ண முயற்சிக்கிறார்கள் என்றும் பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களை ஏற்படுத்துகின்றன என திருமாவளவன் கூறினார்.

மேலும் பேசிய அவர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது என்றும் பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் பா.ஜ.க. விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது.ஆனால் இதற்கு உடன்படாத தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி இன்னும் மத்திய அரசால் விடுவிக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பா.ஜ.க அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவுக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள் என்றும் பா.ஜ.க. அல்லாத மாநிலங்களையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிறார்கள் என .இவ்வாறு அவர் பேசினார்.
English Summary
Let go of the ego. Thirumavalavan appeals to Indian alliance leaders