பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் கமல்! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல் நடிப்பு, இயக்கம், பாடுவது என பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகிறார். இவர் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் மூலம் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி என பல ஹிட்டான படங்களை தயாரித்த நிலையில் கடைசியாக விக்ரம் படத்தை தயாரித்திருந்தது. 

இந்த விக்ரம் படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல் வெளியானது. அதை அடுத்து இந்த நிறுவனம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் என இரண்டையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நிறுவனம் சார்பில் ராஜ் கமல் பெயரில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்து ஒரு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. 

அதில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நாங்கள் நியமிக்கவில்லை. 

திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் உங்களை வந்தடைந்தால் எந்த வகையிலும் அதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். 

எங்கள் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது. 

இந்த மோசடி குறித்து நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கம் ''இந்தியன் 2'' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் வினோத் இயக்கம் புதிய படம், மணிரத் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயண இயக்கத்தில் மற்றொரு படம் என கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Kamal warned public


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->