"கங்குவா" பட ட்ரைலரை பாராட்டிய கார்த்திக்.!  - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் "சிறுத்தை" சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படம் 3டி முறையில் ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ளது. 10 மொழிகளில் வெளியாக உள்ள 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'கங்குவா' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். வனத்திற்குள் வாழ்ந்த பழங்கால மனிதர்கள், அவர்களின் தோற்றம், போர்க்காட்சிகள் என்று பல இடங்களில் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் சிறப்பாக வந்துள்ளன.

தற்போது, வெளியாகியுள்ள டிரெய்லரின் இறுதியில் குதிரையில் வரும் ஒருவரை பார்த்து சூர்யா சிரிக்கிறார். ஆனால் அந்த நபரின் முகத்தை டிரெய்லரில் படக்குழுவினர் காட்டவில்லை. அது நடிகர் கார்த்தியாகவே இருக்க வேண்டும், என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி படத்தின் டிரெய்லர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் 'என்னவொரு டிரெய்லர். இந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பெருமையாக இருக்கிறது" என்று நடிகர் சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthik wishes kanguva movie trailer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->