டெல்லியில் தீ விபத்து: 800-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதம்,02 குழந்தைகள் பரிதாபமாக பலி..!
More than 800 huts burnt down in Delhi fire 02 children tragically died
டெல்லி ரோகினியில் செக்டார் 17 இல் உள்ள ஜூகி கிளஸ்டரில் பல குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. ஜூகி கிளஸ்டரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனாலும், தீயானது கிடுகிடுவென அருகில் உள்ள குடிசைகளில் பரவத்தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து, கூடுதலாக 26 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தது.

மொத்தம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்த 800-க்கும் மேற்பட்ட அடர்த்தியான குடிசைகள் எரிந்து சேதமடைந்தன. 03 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கி 02 வயது மற்றும் 03 வயது குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மின் வயரிங் அமைப்புகள் இல்லை. ஆனால், பல சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம்? என சந்தேகிக்கப்படுவதால் போலீசார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
More than 800 huts burnt down in Delhi fire 02 children tragically died