ரசிகர்கள் தான் என்னுடைய பலமே - நடிகர் மம்முட்டி பேட்டி.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான மம்முட்டி தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த பிரம்மயுகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்ததைத் தொடர்ந்து மம்முட்டி 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். வைசாக் இயக்கி இருக்கும் இந்தப்படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார். 

இந்தப் படத்தில் சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாக இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதையடுத்து தற்போது இந்தப் படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மம்முட்டி புரொமோஷன் பணியின் போது பேசுகையில், என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள் தான். 42 வருடங்களாக என்னோடு நிற்கின்றார்கள். தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor mammutti press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->