திடீரென வந்த உத்தரவு... துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெங்கட் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிலும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. 

இதற்கிடையே ஒரு வாரத்திற்கு முன்பு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது கணிக்கப்பட்டிருந்தது போல, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதுமட்டுமல்லாமல், இன்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

storm warning cages hoisted in ports


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->