'தவறான செய்தி.' தளபதி 66 படத்தில் நடிப்பது குறித்து பிரபல நகைச்சுவை நடிகர் ட்வீட்.!
actor manobala about thalapathy 66
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜயுடன் பிகில், பீஸ்ட், மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ள நிலையில், தற்போது தளபதி 66 படத்திலும் யோகி பாபு கம்மிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் பூஜை நடைபெற்ற பொழுது பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மறுத்துள்ளார். இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
actor manobala about thalapathy 66