தமிழகத்தை அதிர வைத்த சத்யப்ரியா கொலை வழக்கு! நாடக காதலன் சதீஷுக்கு தூக்கு தண்டனை கிடைக்குமா? 27ஆம் தேதி தீர்ப்பு!
Chennai Sathyapriya murder case judgement date
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி சத்யப்ரியாவை கொன்ற வழக்கில், வரும் டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த மாணிக்கத்தின் மகள் சத்யப்ரியாவுக்கு, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23) ஒருதலைக் காதலுடன் தொந்தரவு கொடுத்து வந்தார்.
சத்யப்ரியாவை காதலிக்க வற்புறுத்திய சதீஷ், அவர் தொடர்ந்து மறுத்ததால், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த மின்சார ரயிலில் சத்யப்ரியாவை தள்ளி கொலை செய்தார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது, 70 சாட்சியர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில், நீதிமன்றம் டிசம்பர் 27ஆம் தேதி தமது தீர்ப்பை வழங்கவுள்ளது.
English Summary
Chennai Sathyapriya murder case judgement date