தேசிய கோடியை தலைகீழாக ஏற்றிய மன்சூர் அலிகான்.! குடியரசு தினத்தில் பரபரப்பு.!
actor mansoor alikan national flag hoisting
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். சமீபகாலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ’தமிழ் தேசிய புலிகள்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றினார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.
இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
ஆனால், தேசிய கொடி தலைகீழாக இருந்தது. உடனே அங்கிருந்தவர்கள் இதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, மன்சூர் அலிகான் கொடியைக் கீழே இறக்கி, மீண்டும் சரியாக ஏற்றினார். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
actor mansoor alikan national flag hoisting