சமந்தா உடனான விவாகரத்து குறித்து முதன் முறையாக ஓப்பனாக பேசிய நடிகர் நாக சைதன்யா.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகையாகான சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர் இவர்களுடைய விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் வெளியாகியது. இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா முதன்முறையாக விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நான் சமந்தா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சமந்தா மிகவும் நல்ல பெண். சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் எங்களுடைய பிரிவு குறித்து போலியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

முதலில் இந்த போலியான தகவல்கள் குறித்து நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அதுவே தற்போது பெரிய பிரச்சினையாக மாறி எங்கள் பிரிவுக்கு வழி வகுத்து விட்டது. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருக்கிறோம்.

 ஆனால் சில ஊடகங்கள் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைக்கவில்லை என தவறாக செய்தி வெளியிடுகின்றனர். மேலும் எங்களது கடந்த காலங்களில் சம்பந்தமில்லாத மூன்றாவது நபர்களை இழுத்து அவமரியாதை செய்கின்றனர். இது மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Nagasaithanya speech about divorced Samantha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->