ஆணுறைகளை வாங்க சொன்ன நடிகர் நகுல்....துணை இயக்குனர் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் நகுல் சினிமாவில் அறிமுகமானார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில், கதாநாயகனான நடிகை சுனைனாவுடன் நடித்த நகுல், 'நாக்க மூக்க' பாடல் மூலம் பெரிய புகழ் பெற்றார்.

மேலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த பல படங்களில் நடிகர் நகுல் பாடியும் உள்ளார்.  இதற்கிடையே இயக்குநர் ஆர்.ஜி.கே இயக்கத்தில் உருவான வாஸ்கோடகாமா படத்தில் நகுலுடன் நடிகர்கள் ஆர்த்தனா பினு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வேலை செய்த துணை இயக்குநர் ஒருவர், நகுல் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசினார். அப்போது, ஒருநாள் படப்பிடிப்பில் 3 ஆணுறைகளை வாங்கிவரும்படி நடிகர் நகுல் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும், எனக்கு வேலையிருப்பதாகாக்கூறியும் அவர் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும்  நான் மறுக்கவே பின்னர் என்னை படப்பிடிப்பில் இருந்து தூக்கிவிட்டதாகவும், 2 வருடம் வேலை செய்ததுக்கு சம்பளமும் தரவில்லை. படத்தில் என் பெயரும் வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் முதலில் நடிகை ஒருவர் நடிக்கவிருந்தது அவர் அட்ஜஸ்மென்ட்டுக்கு ஒத்துழைக்கமாட்டார் என்பதால் அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Nakul asked to buy a condom Assistant director sensational complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->