என்னுடைய திருமணம் திருப்பதியில் நடக்கும் - நடிகர் பிரபாஸ்! - Seithipunal
Seithipunal


இராமாயணத்தை தழுவி மோஷன் கேப்சரிங் முறையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஆதிபுரூஷ். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வில் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைப் அலிகான் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது நடிகர் பிரபாஸ் பேசுவதற்காக மேடை ஏறிய போது ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட தொடங்கினர். திருமணம் எப்போது என்று கேட்ட இரகர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் பிரபாஸ் " திருமணம் திருப்பதியில் தான் நடக்கும் என்று கூறினார்.

பாகுபலி படத்திற்க்குப் பிறகு நடிகர் பிரபாஸுக்கும் அனுஷ்காவிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தின் கதாநாயகி உடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் 43 வயதான நடிகர் பிரபாஸ் க்கு திருமணம் எப்போது நடக்கும், அவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் திரைத்துறையை சார்ந்தவரா போன்ற இரசிகர்களின் கேள்விகளுக்கான பதில்கள் தான் ரகசியமாகவே இருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Prabhas Marriage Going To Be Held At Tirupati


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->