படப்பிடிப்பில் மயங்கி விழுந்த தெறி பட நடிகை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா தசை அழற்சி என்ற அரியவகை நோயால் பாதிப்படைந்தார். இந்தப் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து சமீபத்தில் ஓய்வெடுத்திருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதாவது, அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில், நடிகை சமந்தா படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “தசை அழற்சி நோய் காரணமாகப் படப்பிடிப்பு கடினமாக இருந்தது. குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. 

ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு வேதனையளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Samantha fainted on shooting spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->