இன்னும் மூன்று மாதத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு திருமணம் - நடிகை சமந்தா பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்னும் மூன்று மாதத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு திருமணம் - நடிகை சமந்தா பேட்டி.!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் ‘குஷி’. ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா பேட்டி கொடுத்துள்ளனர். 

அந்தப் பேட்டியில் நடிகை சமந்தா விஜய்தேவரகொண்டாவை பற்றியும் அவரது திருமணம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதாவது, “விஜய் தேவரகொண்டாவைப் பார்க்கும் பலரும் அவர் ஒரு ரெளடி, ரக்ட் பாய் என்று நினைப்பார்கள். 

ஆனால், உண்மையிலேயே அவர் ஒழுக்கமானவர். நேரத்திற்கு தூங்கி எழுந்திருப்பார். சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள், அவருக்கு ஒரு கெட்டப் பழக்கம் கூட கிடையாது. 

எனக்கு இது போன்ற கதைகள் போர் அடித்து விட்டது. ‘குஷி’ படத்தில் காதல் நன்றாக வரக் காரணம் விஜய் தேவரகொண்டாவும் தான். இந்தப் படத்திற்குப் பிறகு திருமணம் குறித்து அவருடைய கருத்து மாறி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடத்தில் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்வார். ஆனால், இந்த வருடம் இறுதியில் அவருடைய கேர்ள் ஃபிரண்டை திருமணம் செய்து கொள்வார்” என்று தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor samantha shared vijaydevarkonda marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->