சிம்ரன், ஜோதிகாவை குதிரைகள் என விமர்சித்த விஜய்.? ஷ்யாம் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விசை தற்போதைய இளம் தலைமுறையினர் பலருக்கும் பிடித்த ஒரு நடிகர் ஆவார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வரும் ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. 

இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக பிரபல நடிகர் ஷ்யாம் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஆடியோ லான்ச் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 

இத்தகைய நிலையில், வாரிசு படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகர் ஷ்யாம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார்.  அப்போது அவரது பல்வேறு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஷ்யாம், "நான் ஹீரோவாக நடித்த பின் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தேன். 

அப்போது நான் நடித்த 12b படம் பற்றி விஜயிடம் பேசினேன். அதைக் கேட்ட நடிகர் விஜய் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளோடு நடிக்கிறாயா என்று ஜாலியாக கூறினார்." என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 12b படத்தில் நடித்த ஜோதிகா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட நடிகைகளை மிகவும் மோசமாக விஜய் பேசினாரா என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor shyam shared Vijay character about 12 B movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->