நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! - Seithipunal
Seithipunal


இந்த படத்தில் குடும்பத்தின் வறுமையை போக்க, சென்னைக்கு வந்து கால் டாக்ஸி ஓட்டும் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் நடிகர் சித்தார்த். ஆள் கடத்தல் தலைவனாக, அபிமன்யு சிங் நடித்துள்ளார்.

தொழிலதிபர் ஒருவரின் மகளை காப்பாற்றுகிறார்.அவர் காப்பாற்றிய பெண் வீட்டுக்குச் செல்ல மறுக்க, கதாநாயகனைை திக்குத் தெரியாமல் ஒரு பயணம் போகலாம்’ என்று அழைக்கிறாள்.

இதற்கு உடன்பட்டு ஹீரோவும் செல்கிறார். அப்போது அந்தப் பயணத்தில் காதல், காமம், என இரண்டையும் வைத்து நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை சுருக்கம்.

படத்தின் மெசேஜ் : பணம் தான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகனுக்கு, பணம் மட்டுமே இந்த உலகில் முக்கியமில்லை என நினைக்கும் நாயகிக்கும் இடையிலான உறவைச் சொல்வது தான் டக்கர் படத்தின் மெசேஜ்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இளைஞனாக நடித்துள்ள நடிகர் சித்தார்த், வறுமையை பற்றி சிறிதும் தெரியாத தோற்றத்துடன் இருப்பது கூடுதல் நகைச்சுவையை தருகிறது.

விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு விடும் டாக்ஸி நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு சீனர் என்பதும் அவர் சென்னையில் வசிக்கிறார் என்பதெல்லாம் இயல்புக்கு மாறாய் நம்ப முடியவில்லை.

கால் டாக்சி உரிமையாளர்களின் ஆட்களை வைத்து, ‘குங்ஃபூ’ சண்டைக் காட்சிக்குத் திட்டமிடவே இப்படி ஒரு சித்தரிப்பு என்று இயக்குநர் சொல்வாரானால், அந்தச் சண்டையில் அப்படி ஒன்றும் எதுவும் புதியதாக தெரியவில்லை.

இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள, ராஸின் சதுர வடிவ மேன்சனுக்குள், நுழைந்து அவர் சார்ந்த அடியாட்களை நாயகன் பந்தாடும் மாடிப்படியில் வரும் சண்டைக் காட்சியை அனைவரும் சுவாரஸ்யமாக இரசிக்கும்படி வடிவமைத்துப் படமாக்கியிருக்கிறார் ‘ஸ்டன்ட்’ இயக்குநர் தினேஷ் காசி.

மேலும் ஆக்‌ஷன் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறிய இயக்குநரின் மெத்தனம், படத்தின் நாயகியை வில்லனிடம் விட்டுட்டு செல்லும், நாயகன் திரும்ப வரும் காட்சியில் நன்றாக தெரிந்தது.அந்த காட்சியில் சுடுகின்ற, கூலிப்படையினரின் கைத்துப்பாக்கிகளில் இருந்து சிதறும் தோட்டாக்கள் ‘ரப்பர்’ குண்டுகளா என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

படத்தில் கிராமப்புறத்தில் வசிக்கும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த இளைஞனாகத் நடித்துள்ள, சித்தார்த் தன்னைக் கொஞ்சம் கூட, ஏழை குடும்ப மகனாக காட்டிக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. படம் முழுவதும் விரப்பாக தான் இருக்கிறார். தத்துவம் பேசும் நவீனப் பெண்ணாக பட்டையை கிளப்பியுள்ளார் நடிகை திவ்யான்ஷா. பிறந்த கிராமத்திலிருந்து ,நகரத்துக்கு செல்லும் நாயகன் படும் பாடுகள் 20 நிமிடம், கடத்தல் லீலையை நிறுவ வில்லனின் ஆக்ஷனுக்கு 10 நிமிடம், யோகிபாபுவின் காமெடிக்கு 10 நிமிடம், என மொத்தம் 40 நிமிடங்களை ஒருவரிக் கதைக்கே ஒதுக்கியிருந்தால் உண்மையாகவே ‘டக்க’ரான காதல், ஆக்‌ஷன் படமாகியிருக்கும், என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sidharths Takkar Movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->