முதல் முறையாக தனது திருமணம், மனைவி குறித்து எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இயக்குனராக மாறி நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர்தான் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா. முதன் முதலில் தல அஜித்தின் வாலி திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி ரசிகர்களிடம் கவனம் பெற்றார். 

அதன் பின்னர், குஷி படத்தை இயக்கினார். அதில் விஜய் ஜோதிகா கெமிஸ்ட்ரி பலரையும் கவர்ந்து இழுத்தது. படத்தின் கதை, திரைக்கதை அனைத்தையும் எஸ்.ஜே. சூர்யா பின்னி பெடலெடுத்து இருப்பார். 

எஸ்.ஜே. சூர்யாவுக்கு நாயகியாகும் பிக்பாஸ் கவர்ச்சி நடிகை.! அறிவிப்பால்  அதிர்ந்த கோலிவுட்.! - Seithipunal

அதன் பின்னர், அவரது நடிப்பில் நியூ என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சயின்ஸ் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளில் இந்த படம் சிக்கினாலும் கூட எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுத்து விட்டது. 

அவர் இயக்கிய படங்கள் எதுவுமே தோல்வியை சந்தித்ததில்லை என்று கூறலாம். தற்போது அவர் வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கலக்கி வருகிறார். 

ஒரே நேரத்தி டபுள் சந்தோஷம்.. எஸ்.ஜே.சூர்யா உற்சாகத்தில் போட்ட ட்வீட்.! -  Seithipunal

இத்தகைய சூழலில் அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், "நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் முதலீடு போட்டு நியூ படத்தை இயக்குனேன். அந்த படம் தோல்வி அடைந்து இருந்தால் என் வாழ்க்கையே மோசம் போயிருக்கும். 

ஒருவேளை எனக்கு குழந்தை மற்றும் மனைவி இருந்திருந்தால் அவர்களையும் பாதித்திருக்கும். அந்த அளவிற்கு நான் சினிமாவில் நிறைய ரிஸ்க் எடுத்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sj surya speech about his marriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->