படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் சூர்யா - தற்போதைய நிலவரம் என்ன? - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சண்டைக் காட்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று நடித்து வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மேலேயிருந்த ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதை பார்த்த படக் குழுவினரும், சக சண்டைக் கலைஞர்களும் அதிர்ச்சியில் அலறினர். இந்த விபத்தில் இருந்து நடிகர் சூர்யா அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து விலகினார்.

இருப்பினும், கேமிரா தோளின் மீது உரசியபடியே விழுந்ததில், நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில், சூர்யா சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா தன் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகவும், ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya injured kanguva movie shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->