"எவ்ளோ நாளாச்சு.. தலைவா உன்ன இப்படி பாத்து.?" நெட்டிசன்களை குஷிப்படுத்திய வடிவேலு.!
actor vadivelu reels old comedy video
கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே 200 கோடி பட்ஜெட்டில் தயரான இந்த படம் ரூ. 650 கோடி கிட்டதட்ட படம் வசூலித்தது., 2 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், இந்த படத்தின் படப் பூஜை சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், அவரது பழைய படமொன்றில் நடித்த காமெடி காட்சியை மீண்டும் நடித்து காண்பித்து அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
English Summary
actor vadivelu reels old comedy video